ஃபர்ஹானா திரைப்படத்தை தடை செய்க! ஹிஜாப் கொச்சைப்படுத்தப்படுகிறது - கொந்தளிக்கும் இஸ்லாமிய கட்சி! - Seithipunal
Seithipunal


புர்கா திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து 'ஃபர்ஹானா' என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளதாக, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹித் ஜமாத் தலைவர் இப்ராஹிம் சபீர் விடுத்துள்ள அறிக்கையில், "அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

அண்மையில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட 'புர்கா' என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் புர்கா படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

புர்கா திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து 'ஃபர்ஹானா' என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

இதில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் விதமாக இதில் வசனங்கள் வருகின்றன. மேலும் இந்த இரண்டு படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும் கொச்சைப்படுத்தப்படுகிறது.

புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுன், நடிகர் கலையரசன், நடிகை மிர்னா, பர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர் செல்வராகவன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது தமிழக காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், 'ஃபர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTJ say Farhana Movie ban


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->