வெளியானது 'தளபதி 68' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 68' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த் முனி ஒளி பதிவு செய்கிறார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக் குழு அறிவித்திருந்தது. 

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 'தளபதி 68' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

இந்த போஸ்டரில் 'எல்லா காலத்திலும் சிறந்தது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy 68 first look poster released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->