சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாகும் தூள் நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள 170 திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய  த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிரபல நடிகரான சீயான் விக்ரம் ரஜினியின் 170 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் ரஜினி மற்றும் விக்ரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Superstar 170 movie actor Vikram play in negative role


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->