சுந்தர். சி - அனுராக் காஷ்யப் இணைந்து களமிறங்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!  - Seithipunal
Seithipunal


கே. திருஞானம் எழுதி இயக்கியுள்ள 'ஒன் 2 ஒன்' என்ற படத்தில் சுந்தர். சி கதாநாயகனாகவும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

24 எச் ஆர் எஸ் ப்ரோடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பட குழு வெளியிட்டுள்ளது. 

ஆக்ரோஷத்துடன் இருக்கும் சுந்தர். சி மற்றும் அனுராக் காஷ்யப் புகைப்படங்கள் கொண்ட இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த படத்தில் சுந்தர். சி, ஒரு குழந்தைக்கு பாசமான தந்தையாகவும் மற்றொரு பக்கம் அதிரடியாகவும் உள்ள ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் விஜய் வர்மன், நீது சந்த்ரா, ராகினி தி வேதி, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இயக்குனர் கே. திருஞானம் திரிஷா நடிப்பில் உருவாகி வெளியாகிய பரமபத விளையாட்டு படத்தை தொடர்ந்து விறுவிறுப்பான கதை களத்தில் கமர்சியல் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sundar C Anurag Kashyap One 2 One movie First look poster 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->