கேஜிஎப் படப்பிடிப்பில் இப்படியா நடந்து கொண்டார் யாஷ்.?! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீநிதி ஷெட்டி.! - Seithipunal
Seithipunal


கே ஜி எஃப் திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீநிதி ஷெட்டி தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான அந்த திரைப்படம்  மிகப்பெரிய தோல்வி  படமாக ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அமைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவே வேண்டாம் என கன்னட சினிமா பக்கம் ஒதுங்கினார்.

ஆனால் அங்கும் அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் இல்லை. கே ஜி எஃப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அதிக சம்பளம் கேட்பதால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வந்தன. தற்போது மேலும் ஒரு செய்தி வெளியாகி சினிமா வட்டாரத்தை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த செய்தியின் படி கேஜிஎஃப் படப்பிடிப்பின் போது படத்தின் நாயகன் யாஷ் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியிடம்  தவறாக நடந்து கொண்டார் என்றும்  அதன் காரணமாக யாஷுடன்   இணைந்து நடிக்க மாட்டேன் என ஸ்ரீநிதி தெரிவித்ததாகவும் அந்த செய்திகளில்  இடம் பெற்றுள்ளது.

தற்போது அந்த செய்தி குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் ஸ்ரீநிதி. இதுகுறித்து சமூக வலைதள பதிவில்  அவர் "சிலர் தவறான தகவல்களை பகிர வேண்டும் என்று சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். ராக்கி பாய் யாஷுடன் கேஜிஎஃப் படத்தில் நடித்தது  மிகவும் பெருமையாக கருதுகிறேன். அவர் உண்மையான ஒரு ஜென்டில்மேன். நல்ல நண்பர் எப்போதும் என்னை ஊக்குவிப்பவர்"என்றுமே நான் அவரது ரசிகை என பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் சினிமா உலகில்  நிலவி வந்த  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srinithi shetty puts a fullstop for the rumours around kgf controversy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->