சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகி இவங்களா? சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் நாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் திரைப்படத்தின் வெற்றியால், முன்னணி இடத்தை தக்கவைத்து அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. 

அந்தவகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் படம்  உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது சாய் பல்லவியுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், முருகதாஸ் இயக்கவுள்ள படத்தின் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளார். ஹிந்தி படங்களில் தீவிரமாக நடித்துவரும் மிருணாள், சிவகார்த்தியேகன் உடனான படத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் கையெழுத்திட உள்ளார்.  

இதனால், படக்குழுவினர் முன்னோட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயன் - முருகதாஸ் இணையும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி, தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் ஏற்கெனவே இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan next film heroine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->