நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்க்கும் படம்: வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. 

அதாவது, சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'அயலான்' என்பதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு புதிய பெருமை கிடைப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan movie update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->