சிவகாா்த்திகேயன் நடிக்கும் 'அயலான்'! முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


 

முதல் பார்வை போஸ்டர் குறித்து 'அயலான்' படத்தின் அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

நடிகர் சிவகாா்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அயலான்'. 

இந்த படத்துக்கு ஏ.ஆா்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'அயலான்' படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கடந்த 3 ஆண்டுகளான கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கனடா என வெளியாகவுள்ள இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிக அளவிலும், 4500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் உடைய இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், 'அயலான்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan Ayalan movie update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->