பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திருமணம் செய்துகொள்ளும்படி‌ கட்டாயப்படுத்தாதீர்கள் - நடிகர் சிம்பு! - Seithipunal
Seithipunal


'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திருமணம் செய்துகொள்ளும்படி‌ கட்டாயப்படுத்தாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் சிம்பு நடித்துள்ளார். மேலும், சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

இந்த படத்தில், ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த படம் வரும் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவிற்கு நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார்.

இந்த விழாவின் போது பேசிய  நடிகர் சிம்பு தெரிவித்ததாவது,

"வாழ்க்கையில் திடீரென யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. பெற்றோர்கள் அவர்களது மகன், மகள்களை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்.

சமூகத்தின் அழுத்தம் காரணமாக தவறான திருமணங்கள் நடைபெறுகிறது. முதலில் அவர்களது வாழ்க்கையை வாழ விடுங்கள். அவர்களுக்கு ஏற்றவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளட்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் சரியான நேரத்தில் சரியான நபரை அனுப்புவார். அதுவரை அமைதியாக இருப்பது சிறந்தது". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu Say about parents should not force children married.


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->