அஜித் ரசிகனா நீ? எடக்குமடக்காக பேசிய ரசிகருக்கு, மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். மேலும் அதனை தொடர்ந்து அவர், வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது  சைத்தான் கி பச்சா, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல படத்தில் நடித்து வருகிறார் 

மேலும் முதல் படத்திலேயே நடிகர் சித்தார்த் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். நடிகர் சித்தார்த் எப்பொழுதும் சமூகத்தில் நிகழும்  பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.மேலும் தனது வெளிப்படையான கருத்துக்களால் பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர்  நேற்று நடந்து முடிந்த IPL போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு வாழ்த்து கூறி அவரை  புகழ்ந்து தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை கண்ட  அஜித் ரசிகர் ஒருவர், ஏன் வாய் கூசாம பொய் சொல்றீங்க, அவங்க எல்லாம் உழைப்பை நம்பியா ஜெயிக்குறாங்க? என கேட்டுள்ளார். அதற்கு நடிகர்  சித்தார்த், நீங்கள் அஜித்தை மதித்திருத்தால்,கண்டிப்பாக கடின உழைப்பை எவ்வாறு மதிப்பது என்பதை கற்று கொண்டிருப்பாய். அவரை போல ஒரு சிறந்த ரோல் மாடல் யாருமில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.



 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

siddharth answered to the fan who talking unneccessary


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->