சுருதிஹாசனின் நடத்தை பற்றி கேள்வி கேட்ட ரசிகர்.. விவகாரமாக பதிலளித்த நடிகை.! - Seithipunal
Seithipunal


உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். தமிழ் சினிமாவில்  பாடகியாக அறிமுகமான இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தனுஷுடன்  இணைந்து நடித்த மூன்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து  நடித்து வந்த இவர் தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

உலக நாயகன் கமல்ஹாசனை போலவே  பல சர்ச்சைகளிலும் ஸ்ருதிஹாசன் பெயர் அடிபட்டது. இந்நிலையில் இவர் வெளிநாட்டைச் சார்ந்த டாட்டூ கலைஞர்  ஒருவரை  டேட்டிங் செய்து வந்தார். அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகியன  இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனது நடிப்பில் முழு கவனமும் செலுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாசன்..

கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.இதுபோன்ற ஒரு கலந்துரையாடலின் போது  ரசிகர்கள் சிலர் கேட்ட அநாகரீகமான கேள்விகளுக்கு நெத்தியில அடித்தார் போல் பதில் சொல்லியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ரசிகர் ஒருவர்  நீங்கள் வெர்ஜினா? என கேட்டு இருக்கிறார். 

அதற்கு  பதிலளிக்கையில்  வெர்ஜினுக்கு  முதலில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுத பழகிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் உங்களை டேட் செய்யலாமா? என கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த  சுருதிஹாசன் ஒரே வார்த்தையில் 'நோ' என பதிலளித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shruthi hassans no nonsense answer to the fans during an interaction in social mdia goes viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->