தளபதி 67 படத்தில் இணைந்த கேஜிஎப் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெறிக்கவிடும் படக்குழு! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான பூஜை ஏற்கனவே நடைபெற்று விட்டது. ஆனால், இதுவரை படவேலைகள் ஆரம்பித்து விட்டதை பட குழு அறிவிக்கவே இல்லை.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.

அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஒளிப்பதிவு மனோஜ் பரஹம்சா, சண்டைப் பயிற்சி அன்பறிவ், படத்தொகுப்பு பிலோமின் ராஜ், நடனம் தினேஷ், கலை சதீஷ் குமார், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி ஆகியோர் எழுதுகின்றனர்.

மேலும், தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanjay Dutt and Priya Anand in Thalapathy67 movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->