தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. இயக்குனர் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் நடித்து வெளியான 'கிசி கா பாய் கிசி கா ஜான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் ரீமேக்கான  'கிசி கா பாய் கிசி கா ஜான்' திரைப்படத்தில் சல்மான் கான், வெங்கடேஷ், ஜெகபதிபாபு, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்க்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.

இந்த திரைப்படம் சல்மான்கானின் படங்களிலேயே குறைவான ஓபனிங் என கூறப்படுகிறது. இவர் தற்போது டைகர் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சல்மான் கானின் அடுத்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் இயக்கு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழில் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salman Khan act in Tamil movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->