இந்தியாவில் முதலிடம்: லியோ திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய 'சலார்'! - Seithipunal
Seithipunal


பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன் நாயகியாகவும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் 'சலார்' திரைப்படம் நேற்று வெளியானது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் திரைப்படத்தின் டிரைலர் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. 

இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ரிஷப் ஷெட்டி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் படம் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளில் ரூ.178.7 கோடி வசூலித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் வசூலில் இதுதான் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் முதல் நாளில் ரூ. 148.5 கோடி வசூலித்திருந்த நிலையில் அதனை முறியடித்து 'சலார்' முதலிடம் பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salaar first day collection update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->