தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.! 2 வது திருமணத்துக்காகவா? பாலிவுட் பிரபலத்தின் ட்விட்டால் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனது தந்தையின் வீட்டில் மகன்களுடன் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இயக்குனர் பணிகளில் பிஸியாகி லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். நடிகர் தனுஷ் தனது படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

பாலிவுட்டின் திரைவிமர்சகரான உமர் சந்து ட்விட்டரில் தனது புதிய பதிவின் மூலம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அந்தப் பதிவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சென்னை சிவில் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருப்பதாக அந்த பதிவில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் தனுஷ் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை ஏமாற்றி விட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு கோலிவுட் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rumours about dhanush aishwarya divorce creates new controversy in kollywood


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->