நடிகை ராதிகா சரத்குமாரா இது.?! நம்பவே முடியலையே.? வெளிநாட்டு அலங்காரத்தில் சூப்பர் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 1980களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர். நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருக்கின்றார்.

பிரபல நடிகரான சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ராடான் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகின்றார். தனது ராட் ஆன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக அவர் நிறைய சீரியல்களை தயாரித்து இருக்கிறார்.

சமீபத்தில் கூட அவர் தொலைக்காட்சிக்கு ஒரு சீரியலை தயாரித்து வருகின்றார். இந்த சீரியலுக்கு கிழக்கு வாசல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகை ரேஷ்மா மற்றும் சஞ்சீவ் வெங்கட் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். இதில் தளபதி விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த நிலையில் ராதிகா இளம் வயதில் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதில் அவர் ஆதிகாலத்து வெளிநாட்டு பெண்களைப் போல உடை அணிந்து இருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் ராதிகாவா இது என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rathika sarathkumar Unseen Young Photo Viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->