சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு லால் சலாம்! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்திற்கு லால் சலாம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க அவருடன் ஒப்பந்தம் போட்டது. ரஜினிகாந்தின் 170வது படம் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக என தகவல் வெளியானது.

இந்நிலையில் ரஜினியின் 171வது படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

லால் சலாம் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஹெல்மட், கிரிக்கெட் பேட், பந்து இருப்பதால் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. வால்சலா திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanths next film is titled Lal Salaam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->