ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது.? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், தமன்னா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என படத்துடஅறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth in Jailor movie audio launch on July 28


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->