ஒரு வழியாக ஜெயிலர் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னடத்தின் பிரபலமான நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் மற்றும் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஐட்டம் சாங்காக உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என படத்துடன் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth in Jailor movie 1St single release on July 6


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->