அண்ணாத்த வெற்றி.. சிவாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி.! - Seithipunal
Seithipunal



கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு ஆகிய முன்னணி நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு படக்குழுவுக்கு வசூலை பெற்றுத் தரவில்லை என்று கூறப்படுகிறது. 

கலவையான விமர்சனங்களை பெற்ற அண்ணாத்த திரைப்படம் மொத்தமாக 150.₹கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிவாவின் வீட்டிற்கு சென்று அவர் குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் சிவா குடும்பத்தினரோடு பேசிவிட்டு சென்ற ரஜினி, சிவாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini gift to director siva


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->