மதுபோதையில் மாணவர்கள்., சபாஷ்.! இப்படி ஒரு தண்டனை யாருமே கொடுத்திருக்க முடியாது.!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்த ஒரு 8 மாணவர்கள் வகுப்பறைக்குள் குடிபோதையில் நுழைந்துள்ளார். இதனை கண்டிக்க நினைத்த கல்லூரி நிர்வாகம் அந்த 8 மாணவர்களையும் சஸ்பெண்டு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

அத்துடன் 3-ம் ஆண்டு படிப்பை தொடரவும் அனுமதிக்க முடியாது என கூறியது. இதனால் எதிர்காலம் கேள்விக்குறியாகியதை எண்ணி அந்த மாணவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குடிபோதையில் மாணவர்கள் வகுப்பறைக்குள் வந்தது தவறு தான். அவர்கள் அதை உணர்ந்துவிட்டனர். (இன்று) விருதுநகரில் இருக்கும் காமராஜர் நினைவு இல்லத்தினை சுத்தப்படுத்தி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கே வரும் பொதுமக்களுக்கு உதவி செய்து 4 மணி முதல் 6 மணி வரை மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 

இதனை கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியிருந்தார். தற்பொழுது இதனை அந்த 8 மாணவர்களும் செய்ய தொடங்கியள்ளனர். மாலை 4 மணிக்கு மேல் அந்த 8 மாணவர்களும் மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punishment for students in court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->