என்னால முடியல... விபரீத முடிவை எடுத்த இயக்குநர்! அடுத்த நொடியே அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


"பிரேமம்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை இயக்குநர் திருமிப்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். பின்னர் ‘கோல்டு’ என்ற படத்தையும் இயக்கினார்.

கோல்டு படத்துக்குப் பின் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘கிஃப்ட்’ படத்தை இயக்கி வருவதாக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்திருந்தார். 

இந்த ‘கிஃப்ட்’படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், இயக்குநர் அல்ஃபோன்ஸ் தான் சினிமாவிலிருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பின்னர் அந்தப் பதிவை நீக்கியுள்ளார். 

அவரின் அந்த பதிவில், "எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை நேற்று தான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். 

நான் சினிமாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழியுமில்லை. நான் குறைந்தபட்சம் ஓடிடி அளவிலான குறும்படங்கள், பாடல்கள், வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்.

என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்க முடியாது. நம் உடல்நலம் பலவீனமாகவோ அல்லது கணிக்க முடியாததாகவோ இருக்கும்போது, ​​​​வாழ்க்கை 'இன்டர்வல் பஞ்ச்' போல திருப்பத்தைக் கொடுத்துவிடுகிறது” என்று அந்த இன்ஸ்டா பதிவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அந்த இன்ஸ்டா பதிவை டெலீட் செய்துள்ளார். 

ஆனால், அந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து, ரசிகர்கள் விரைவில் அல்போன்ஸ் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pramam Director Insta post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->