காதலர் தின ஸ்பெஷல்! மகிழ்ச்சியான செய்தியுடன் சின்னத்தம்பி ப்ரஜின் வெளியிட்ட புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகர் ப்ரஜின். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இது ஒரு காதல் கதை', காதலிக்க நேரமில்லை', ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் ப்ரஜின்  தற்போது சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு இந்த சீரியலின் மூலம் பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ப்ரஜின் சீரியல்களில் மட்டுமின்றி ,திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்  டிஷ்யூம், சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாண்ட்ரா கண்ணுக்குள் நிலவு, போராளி, 6 மெழுகுவத்திகள், காற்றின் மொழி உட்பட பல  தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ப்ரஜின் மற்றும் சாண்ட்ராவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனநிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கிடையே  சாண்ட்ரா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனை காதலர் தினத்தை முன்னிட்டு ப்ரஜின் கூறவிருந்த நிலையில்,  ரசிகர்களின் ஆவலால் முன்கூட்டியே புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

A post shared by Prajin Padmanabhan (@prajinpadmanabhan) on

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

English Summary

prajin post wife pregnancy photo


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal