சிம்புவின் படத்தில் லவ் டுடே நாயகன்.?! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பினில் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் மூலமாக டைரக்டராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019 -ல் வெளியாகிய இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, 2 வருடங்களுக்கு பின், பிரதீப் ரெங்கநாதன் லவ் டுடே எனும் திரைப்படத்தை இயக்கினார்.

அப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் பிரதீப் அந்த திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருப்பார். கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், வெளியாகிய லவ் டுடே படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதனால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது பிரதீப் ரெங்கநாதன் ரஜினிகாந்திடம் ஒரு கதை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பிரதீப்பின் அடுத்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துள்ளனர்.

இதனையடுத்து, தற்பொழுது வெளியாகிய தகவலின் படி பிரதீப் அடுத்ததாக சிம்புவின் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களால் சிம்பு இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் எனவே அந்த வாய்ப்பு பிரதீப் ரங்க நாதனுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pradeep Renganadhan In simbus Corona Kumar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->