‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘சிவோஹம்’ பாடல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது.

அதன்படி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, நடிகை குஷ்பு ரேவதி உள்ளிட்டஉள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் கொண்டனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பொன்னியன் செல்வன் 2 திரைப்படம் வரும் 27ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நாளை மறுநாள் தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘சிவோஹம்’ எனத் தொடங்கும் பாடலை இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan 2 shivoham song release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->