எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் காதல்.. கவிஞர் வைரமுத்து காதலர் தின வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்தியாவில் காதலர் தினங்கள கொண்ட சமூக ஆர்வலர்கள் உட்பட சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் காதலர் தினங்களில் ஜோடியாக சுற்றும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மற்றும் அடித்து துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் வெளிநாடுகளில் காதலர் தினங்களை அவர்களின் முக்கிய பண்டிகையை போல கொண்டாடி வருகின்றனர். 

இந்தியாவில் காதலர் தினத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், நடிகர்கள் மற்றும் கவிஞர்கள் ஆதரவுகளை தெரிவித்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து ட்விட்டரில் காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் 'எந்த நிலையிலும் வரலாம். எந்த வயதிலும் வரலாம். அது ஒன்றல்ல,
ஒன்றிரண்டு, மூன்று, நான்கென்று
எண்ணிக்கை ஏறலாம். ஆனால்,
என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற
உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த
இன்பம்தான் காதல். அந்த முதல் அனுபவம் வாழ்க.' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poet writer vairamuthu wishes lovers day in tweeter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->