"சங்பரிவாரங்களின் நாடகம் எடுபடாது" 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட ட்ரெய்லர்... பினராய் விஜயன் பதிலடி.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன். இந்தத் திரைப்படத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

சுதிப்தோ சென் இயக்கியிருக்கும் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கடத்தப்பட்டு அங்கு மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது கேரள மாநில முதல்வர்  பினராய்  விஜயன் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்  கேரள மாநிலத்தில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிக்கும் ஒரு சிலரின்  மட்டமான செயல் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் என்பது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட கேரளாவை மத பயங்கரவாதத்தின் மையமாக காட்ட முயற்சிக்கும் சங் பரிவாரங்களின் பொய்ப் பிரச்சாரங்கள்  எனக் கூறியிருக்கிறார்.

போலியான கதைகள் மற்றும் திரைப்படங்களின் மூலம் மக்களிடையே மத பிரிவினையை தூண்டி அரசியல் லாபம் தேட சங் பரிவாரங்கள் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். நாம் பார்த்த இந்த படத்தின் டிரைலர் சங் பரிவாரங்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலைகளின் தயாரிப்பு என அவர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். உலகின் முன்பு இது போன்ற பொய் பிரச்சாரங்களை பரப்பி  மதச்சார்பற்ற கேரளாவில் ஒரு மதத்தை மட்டும் அன்னியப்படுத்தும் வேலையை சங்பரிவாரங்கள் திட்டமிட்டு செய்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pinarayi Vijayan response to the trailer of the movie Kerala Story the drama of the Sanghparivars not going to work in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->