சர்ச்சையான பாடல்.. படத்தை ஓட வைக்க விஜய் உதவியை நாடிய ஷாருக்கான் பட குழு.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோன் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான பதான்.

இந்த திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 25ல் வெளியாக இருக்கிறது. இதில், இடம்பெற்று இருக்கும் பேஷாராம் ரங் எனும் பாடலானது ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. 

இந்த திரைப்படம் இதுவரை 13.5 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியுப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி ஆபாசமாக நடித்திருப்பார். 

இது குறித்து இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டு இருக்கின்றார்.

படத்திற்கு எதிராக கிளம்பிய விமர்சனங்களை சரி செய்யும் பொருட்டு விஜய் இடம் பட குழு ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு படக்குழுவுக்கு பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan trailer out By Vijay


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->