வாடகை தாய்க்கான விதிமுறைகள் இதோ.! மீறிய விக்னேஷ்- நயன் தம்பதி.?! நடவடிக்கை எடுக்கப்படுமா.?!  - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் நேற்று அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு அவர், "நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு குழந்தை பெற்றுக் கொண்டார்களா என்பது குறித்து அவர்களிடம் விசாரிக்கப்படும்.

டி.எம்.எஸ் மூலமாக அவர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு அவர்கள் விதிமுறைகளை மீறி இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். 

21 முதல் 35 வயது உள்ள பெண்கள் தங்களது கருமுட்டையை தானமாக அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த விதிமுறைகளை அவர்கள் மீறி இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், வாடகைத்தாய் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்வதில் என்னென்ன விதிமுறைகள் இருக்கிறது. இந்த விதிமுறைகளை விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் மீறினார்களா என்பதை பரிசீலிக்கலாம். 

அதன்படி வாடகை தாய் மூலமாக ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், அவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். 

இந்த தம்பதிகளில் ஒருவராவது குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியற்றவராக இருக்க வேண்டும். 

குறிப்பிட்ட வாடகை தாய்க்கும் சம்பாதிக்கும் தகுதி சான்றிதழ் இருக்க வேண்டும். 

ஒரு பெண் ஒரே ஒரு முறை மட்டும் தான் வாடகை தாயாக இருக்க முடியும். 

16 மாத கால இன்சூரன்ஸ் வாடகை தாய் எடுத்து இருக்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்கு நெருங்கிய உறவானவர்கள் மட்டும்தான் வாடகை தாயாக இருக்க முடியும்.

விதிமுறைகளை மீறி இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருந்த நிலையில், திருமணமாகி வெறும் 4 மாதம் ஆகியோருப்பதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் அமைச்சரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nettisens ask about nayanthara vignesh sivan baby to minister ma subramaniyan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->