விஜயின் பீஸ்ட் படம் தோல்வியடைய விஜய் தான் காரணம்.! நெல்சன் ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.

 இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

இந்த படம் வெளியாகிய நாள் முதல் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்று நடிகர் விஜய்யின் தரப்பிலிருந்து எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. 

தற்போது நெல்சன், "இந்த படத்தின் கதை, காமெடி மற்றும் குடும்ப கதையை அடிப்படையாக கொண்டது. ஆனால், நடிகர் விஜய் இதை ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக மாற்ற வேண்டும் என்று உத்தரவு போட்டார். இதுதான் படம் தோல்வியடைந்ததற்கு காரணம் என்று விளக்கம் கொடுத்துள்ளார். இது விஜய்க்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nelson speech about why beast movie flop


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->