எல்லாம் போச்சே.! பட வாய்ப்பு தருவதாக கூறி பெண்களிடம் உல்லாசமாக இருந்த மோகன், வைரலாகும் வீடியோவால் கதறல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர்களை தேர்ந்தெடுக்கும் காஸ்டிங் இயக்குனர் மோகன், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக துணை நடிகை மித்ரா திரையுலகினர் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்த வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில்  வெளியிட்டார். இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் இதுகுறித்து மோகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது,இதில் எனது தவறு எதுவும் இல்லை. நான் 14 ஆண்டுகளாக மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் உயரதிகாரியாக வேலை பார்த்தவன்.

 ஒரு வீடியோவால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. நான் எனது குடும்பத்தை இழந்து தவிக்கிறேன். மேலும் இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையை படம் பிடித்து காட்டிவிட்டனர். நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்ல, மிரட்டவும் இல்லை .


 

மேலும் நான் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.நான் எந்த தவறும் செய்யாதபோது ஏன் ஓடி ஒளிய வேண்டும்? நான் என்னுடைய போனை கூட ஆப் செய்யவில்லை. 

மேலும் இது தொடர்பாக கண்டிப்பாக புகார் அளித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று மோகன் கூறியுள்ளார்.ஆனால் மோகன் மீது  பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

English Summary

mohan cheat girls who ask chance in movies


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal