யோகிபாபுவை புகழ்ந்த திமுக அமைச்சர்.! வைரல் போஸ்ட்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், ஹீரோவாகவும் பயணித்து வருகிறார் யோகிபாபு.  ரஜினிகாந்துடன் நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஜெயிலர்' மற்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் 'ஜவான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், ஆர்.கண்ணனின் அடுத்த படத்திலும் ஜான்சனின் ‘மெடிக்கல் மிராக்கிள்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் ஓவியாவுடன் 'கான்ட்ராக்டர் நேசமணி', நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் 'லோக்கல் சரக்கு ' உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

எச்.வினோத் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். 
இந்நிலையில், யோகி பாபுவின் குழந்தையின் பெயர் சூட்டு மற்றும் பிறந்தநாள் விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ள அமைச்சர், “வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட வாழ்க்கையை வெல்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்த நடிகர் யோகி பாபு. மேலும் இவரது குழந்தையின் பெயர் சூட்டுதல் மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று கூறி நிகழ்வின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பார்த்திபனும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ma Subramaniyan about yogi babu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->