மீண்டும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜயா.? வெளியான தகவலால் ரசிகர்கள் ஆச்சரியம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டாரை அடுத்ததாக யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் தலைப்பு ”ஜெயிலர்” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may vijay in jailer movie 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->