."செட் ஆகல பிரேக்கப் பண்ணிகிட்டோம்" முதல் முறையாக கவினுடன் பிரேக்கப் குறித்து லாஸ்லியா ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் லாஸ்லியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடிகை லாஸ்லியா நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்று ரீமேக் செய்யப்படுகிறது. இதனை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்திருக்கிறார்.

லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் மே 6ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

கவினும் லாஸ்லியாவை பிக்பாஸ் வீட்டில் காதலித்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவரவரும் தங்களது வேலைகளில் ஈடுபட துவங்கி விட்டனர். அதன் பிறகு கவின் நிறைய படங்களிலும், லாஸ்லியா நிறைய படங்களிலும் வாய்ப்பு கிடைத்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் நடிகை லாஸ்லியா எனக்கும் கவிநுக்கும் செட் ஆகவில்லை. எனவே இருவரும் பிரிந்து விட்டோம். என்று தங்களது காதல் முறிவு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya about kavin love 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->