எல்கேஜி படக்குழு முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர்.ஜே.பாலாஜி - நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படமானது முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி, அதனை கிண்டல் செய்யும் வகையில் உருவாகியுள்ள படம். 

இந்த படத்தில் அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து, படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் தோற்றமானது மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை நினைவு படுத்தும் வகையில் இருந்தது. 

இதனை கண்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர். அந்த வகையில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்திற்கு தனது பதிலை தெரிவித்து மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

English Summary

LKG movie release date


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal