"மார்க் ஆண்டனி" படப்பிடிப்பில் மீண்டும் விபத்து.. லைட் கம்பம் விழுந்ததில் லைட் மேன் படுகாயம்..!! - Seithipunal
Seithipunal


திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி எனும் படத்தை இயக்கி வருகிறார். சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள ஈவிபி படபிடிப்பு தளத்தில் மார்க் ஆண்டனி படத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசமைக்க வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி சண்டைக் காட்சி படப்பிடிப்பும் பொழுது பயன்படுத்தப்பட்ட லாரி நிற்காமல் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்காமல் நடிகர் விஷால் நூலிழையில் தப்பித்தார். இது தொடர்பான வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த விபத்து குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அதே படப்பிடிப்பு தளத்தில் இன்று மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஈவிபி பிலிம் சிட்டியில் இன்று நடைபெற்ற மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் பொழுது லைட் மேன் தலையில் லைட் கம்பம் விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.

குமணன்சாவடியை சேர்ந்த முருகன்(33), என்பவர் லைட் மேனாக வேலை செய்ய வந்தபோது எதிர்பாராத விதமாக லைட் கம்பம் அவரது நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் லைட் மேன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் அடுத்தடுத்து ஏற்படும் விபத்துகளால் பட குழுவினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Light man injured in Mark Antony movie shooting spot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->