லியோ வெற்றி விழா கொண்டாட்டத்தில் திடீர் திருப்பம்! - Seithipunal
Seithipunal


லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கான டிக்கெட்டுகள் உடன் ஆதார்கார்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லியோ.

இந்த திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தில் மட்டும் ரூ. 461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிலையில், படத்தின் வெற்றி விழா வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.

இந்த வெற்றி விழாவிற்கு 200-300 கார்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கி உள்ள நிலையில், அனுமதி டிக்கெட் உடன் ஆதார் கார்டும் எடுத்து வந்தால் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo Successes meet new rule


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->