யூடியூபில் வெளியானது லியோ சக்ஸஸ் மீட்.! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், இந்த சக்சஸ் மீட் நிகழ்வின் வீடியோ தொகுப்பு நேற்று மாலை சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இதனை, தளபதி ரசிகர்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

வழக்கமான நன்றி, குட்டி ஸ்டோரி மட்டுமின்றி, ரஜினியின் காக்கா - கழுகு கதைக்கு பதிலடி, ரசிகர்களின் அரசியல் ஆர்வத்துக்கு தூபம், லியோ பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு என்று நேரடியாகவும், மறைபொருளாகவும் பேசிய விஜயின் உரை அவரது ரசிகர்களை மீண்டும் மகிழ்வித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் மற்றும் த்ரிஷாவின் வீடியோக்களும் தனியாக வெளியாகி விஜய் ரசிகர்களை மேலும், உற்சாகப்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo success meet released youtube


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->