'லியோ' வெளியீடு: கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இந்நிலையில் லியோ பட தயாரிப்பு நிறுவனம், சட்ட விரோதமாக லியோ திரைப்படத்தை 1200க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசு மற்றும் தனியார் இணையதள சேவை உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பு நிறுவனம் சார்பில் லியோ திரைப்படம் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

மிகுந்த பொருட்செலவுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டால் நஷ்டம் ஏற்படுவதோடு கலைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து சட்ட விரோதமாக லியோ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து, தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo Release High Court order 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->