யோகிபாபுவுக்கு ஜோடியான லட்சுமி மேனன்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


யோகி பாபு புதியதாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் லட்சுமிமேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், பன்னி குட்டி, பொம்மை நாயகி போன்ற படங்களில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் பன்னி குட்டி படத்தை அனுசரன் இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் யோகி பாபு காதல் கதை திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshmi Menon pair with Yogibabu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->