குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் கடந்த ஒன்றாம் தேதி வெளியான படம் ‘குஷி’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 70 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 

இந்தப் படத்துக்கு ’ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கேடகர், முரளி சர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் படம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kushi movie OTT release date announce


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->