பீஸ்ட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி இரண்டே நாளில் வாஷவுட் ஆன பீஸ்ட்.! ஓரம் கட்டிய கேஜிஃஎப் 2.! - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று கேஜிஎப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் 2 திரைப்படத்திற்கும் போட்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. 

இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு நிறைய கூட்டம் வராத காரணத்தால் பல திரையரங்குகள் கேஜிஎப் 2 திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், இதனால் பல நாட்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே தியேட்டரை விட்டு வெளியேறுவது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kgf 2 beat beast movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->