25 நாட்களுக்கு 25 ஆயிரம் பேர்: கார்த்தி ரசிகர் மன்றத்தினர் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இந்த படத்தில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடிக்கிறார். 

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் கார்த்தி ரசிகர்கள் ஜப்பான் திரைப்படத்தை கொண்டாடும் வகையில் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு ஆயிரம் பேர் வீதம் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகின்றனர். 

அக்டோபர் 17ஆம் தேதி முதல் 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி வரை இந்த அன்னதானம் வழங்கப்படும் என கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் உள்ள தி. நகர் பகுதியில் அக்டோபர் 14 ம் தேதி அன்று கார்த்திக் மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர், மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்து 'ஜப்பான்' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthi fans giving food 25 thousand people


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->