கண்ணன் உயிருக்கே உலைவைத்த கதிர்.?! சீரியலீல் ட்விஸ்ட்.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும். அந்தவகையில் கடந்த 2018 முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். 

நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழும் கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் அதிக ரசிகர்களை கொண்ட கேரக்டராக முல்லை கேரக்டர் இருக்கிறது. 

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் துடிப்பான சுறுசுறுப்பான நடிப்பு அனைவரையும் ஆனால் எதிர்பாராதவிதமாக சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இந்த கதாபாத்திரத்தை எப்படி ரிப்ளேஸ் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்க வந்தார். 

முதலில் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் தனது திறமையான நடிப்பால் காவியா அறிவுமணி அனைவரையும் கவர்ந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் காவியா நிறைய ரசிகர்களை பெற்றார். 

இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜனார்த்தன் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பையனிடம் கதிர் சண்டையிட இதனால் ஆத்திரமடைந்த கடைப் பையன் அடியாட்களை வைத்து கண்ணனை அடித்து உதைக்கிறார். இதனால் கண்ணனின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kannan get attacked


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->