விஜய்யின் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கப்போவது இந்த நடிகையா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சினிமாயுலகில் சமீபகாலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையும் சினிமாவாக எடுப்பதற்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.

மேலும் இயக்குனர்கள் விஜய், லிங்குசாமி, பிரியதர்ஷினி, பாரதிராஜா என பலரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க மும்முரமாக இறங்கியுள்ளனர் .இதனை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் இயக்குனர் விஜய் தான் இயக்கும் ஜெயலலிதாவின் படத்திற்கு தலைவி என பெயரிட்டிருந்தார். மேலும் அதில் ஜெயலலிதாவாக வித்யாபாலனை நடிக்க வைக்கவும் முடிவு செய்திருந்தார்.இந்நிலையில் வித்யாபாலனுக்கு சரியான தேதிகள் கிடைக்காததால் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை 

இதனை தொடர்ந்து தாம்தூம் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்த, சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளதாக கங்கனாவின் பிறந்த நாளை முன்னிட்டு  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kangana ranawat act as jayalalitha in thalaivi movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->