KGF - 2 வை முந்திய கந்தாரா.. அபார சாதனை.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னடத்தில் காந்தாரா எனும் திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் தெய்வ நர்த்தகர்களின் துயரம் குறித்து விரிவாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமாக  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. காந்தாரா திரைப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது காந்தாரா திரைப்படமானது கே.ஜி.எஃப் 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காந்தாரா படம் 168 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் மொத்த வசூலில் அதிகப்படியான தொகை ரூ.155 கோடிகள் தான். கே ஜி எஃப் 2 திரைப்படம் தான் ரூ.155 கோடி வசூல் பெற்று முதல் இடத்தில் இருந்தது. தற்போது காந்தாரா படம் ரூ.128 கோடி வசூல் செய்து அதை முந்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kandhara movie beat kgf 2


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->