"ஜேம்ஸ் வசந்தனின் யோக்யதை என்ன என்று எனக்கு தெரியும்" கனல் கண்ணனின் கடும் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


சில நாட்களாகவே இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் இசைஞானி இளையராஜா இடையேயான மோதல்  தொடர்ந்து கொண்டே வருகிறது. தற்போது சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் இளையராஜாவிற்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜா அமெரிக்காவில் பேசிய ஒரு கருத்து தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன்  இளையராஜாவை கடுமையாக சாடி  வருகிறார். இதற்கு பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. உலகமே கொண்டாடும் ஒரு இசைக் கலைஞனை இவ்வாறாக ஒருமைகளில் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது என பலரும் ஜேம்ஸ் வசந்தனை  குறை கூறி வந்தனர்.

"கிறிஸ்தவ நாடான அமெரிக்காவை ஒன்றும் சொல்லாத போது இவர் இளையராஜா மீது உள்ள காழ்புணர்ச்சியில் தான் இவ்வாறு பேசி வருகிறார்" என மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில்  சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் இந்தப் பிரச்சினையை பற்றிய ஒரு பேட்டியில்  ஜேம்ஸ் வசந்தனை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் கூறியிருக்கும் அவர், "ஜேம்ஸ் வசந்தனின் யோக்யதை என்ன என்று எனக்குத் தெரியும். அவர் அண்டை வீட்டு பெண்ணுடன் பிரச்சனை செய்து  அவரது வீட்டில் சிறுநீர் கழித்து வந்தவர்  என மிகவும் கேவலமாக விமர்சனம் செய்துள்ளார்". மேலும் அவர் ஒரு இந்து பெண்ணை கிறிஸ்தவராக மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு கிறிஸ்தவ பெண் ஒருவரையே திருமணம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் கனல் கண்ணன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanal kannan abused james vasanhan for his remarks illayaraja


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->