லியோவில் கமல்ஹாசன்! உடனிருந்த விஜய்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்த லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், லியோ படத்தில் நடிகர் கமலஹாசன் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு திரைபட்டலாமே நடித்துள்ளது.

வருகின்ற 19ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரும் 30ஆம் தேதி நடக்க இருந்தலியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, பாதுகாப்பு காரணங்களால் நடைபெறாது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், லியோ படத்தில் நடிகர் கமலஹாசன் டப்பிங் பேசுவதாக கூறப்படும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. 

அண்மைய காலமாக நடிகர் கமல் விக்ரம் படத் தோற்றத்திலேயே இருப்பதால், அவர் லியோ படத்தில் நடித்திருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், கமலஹாசன் டப்பிங் செய்வது போல வெளியான இந்த புகைப்படம் அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், டப்பிங் பணியின் போது நடிகர் கமலஹாசன் உடன், நடிகர் விஜய் உடன் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhaasan in leo movie update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->