சரியான நேரத்தில் சரியான அறிவுரை! பிக்பாஸ் களத்தை பயன்படுத்திக்கொண்ட கமல்ஹாசன்! - Seithipunal
Seithipunal



இளம் வயதைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதிலிருந்து எப்படி தற்கொத்த கொள்வது என்பது குறித்து நடிகர் கமலஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு மேற்கொண்டு உள்ளார்.

இயக்குநர்கள் வினோத் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் படங்களில் நடிக்க உள்ள கமல்ஹாசன், கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் தனது அரசியல் கட்சியையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், நடப்பு பிக்பாஸ் சீசன் நிகழ்வில் கமல்ஹாசன் ஒரு விழிப்புணர்வை மேற்கொண்டு உள்ளார். அதில், அண்மை காலமாக இளம் வயதைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக 30 - 40 வயது உள்ளவர்களுக்கு வருவது தான் வியப்பாக உள்ளது. இந்த மாரடைப்பு வர மூன்று காரணங்களை என் மருத்துவ நண்பர்கள் கூறியுள்ளனர்.

உறக்கமின்மை, உணவுப் பழக்கம், செயலாற்றாமல் இருப்பது ஆகிய இந்த 3 காரணங்களால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. 

உணவே மருந்தாக இருக்க வேண்டுமே தவிர, மருந்து உணவாக இருக்கக் கூடாது. உடல் செயல்பாட்டுகளை நாம் செய்வதில்லை. அசையாமல் உருளைக்கிழங்குகளைப்போல் இருக்கிறோம். 

ஒரு கடைக்கு செல்வது என்றால் கூட பைக்கில் செல்கிறோம். அதையெல்லாம் தவிர்க்க வேண்டும். நடந்து செல்ல வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும். கிரிக்கெட் பார்த்தால் மட்டும் போதாது, நாமும் ஏதாவது விளையாட வேண்டும். உடல் உழைப்பு வேண்டும். 

ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்திருக்கலாகாது பாப்பா. இளைஞர்கள் இதை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhaasan advise bigg boss show stage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->