கருத்து வேறுபாடுகள் அனைத்து படங்களிலும் இருக்கும் - பொன்னியின் செல்வன் குறித்து கமல் கருத்து.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாடம் திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

 மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டு தேதி அறிவிக்கபட்ட நாளிலிருந்தே திரைபடத்திற்கு ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இதனை ஒரு வாரத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் முன்பதிவு செய்து சென்று பார்த்து வருகின்றனர். இந்த படத்தை பார்த்த பலரும் அப்படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திற்கும் ரசிகர்களாகி வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 வெளியான 4 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படத்தின் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்-2' படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'கருத்து வேறுபாடுகள் அனைத்து படங்களிலும் இருக்கும். எல்லா படங்களுக்கும் மாற்று கருத்துக்கள் வரும். அது இந்த படத்தில் இருந்தாலும் கூட, மக்கள் இந்த படத்தை கொண்டாடுகின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் சினிமாவின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் போற்றும் ஒரு படத்தை எடுத்தற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்த  மணிரத்னத்திற்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திர பட்டாளத்தயும் பாராட்ட வேண்டும்' என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal speech about ponniyin selvan 2


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->